Kadhale Kadhale

காதலே காதலே என்னை உடைத்தேனே
என்னில் உன்னை அடைத்தேனே
உயிர் கட்டி இணைத்தேனே
நேற்றினை காற்றிலே கொட்டி இருந்தேனே
இமை கட்டு அவிழ்த்தேனே
துயர் மட்டும் மறைத்தேனே

நிழல் ஆடும் நினைவில் ரெண்டு
களவாடி தருவேன் இன்று
கடிகாரம் காலம் நேரம் சுழற்றிடுவேன்
உனை காணா உலகம் சென்று
அங்கேயும் இதயம் தந்து
புதிதான காதல் ஒன்று நிகழ்த்திடுவேன்

இன்று நேற்று நாளை
என்றும் நீ என் தேவதை
காதல் செய்யும் மாயை
என் வானம் எங்கும் பூ மழை

மனதோடு மட்டும் இங்கு
உறவாடும் நேசம் ஒன்று
உயிரோடு என்னை ஏதோ இறக்கியதே

படியேறி கீழே செல்லும்
புரியாத பாதை ஒன்று
அதில் ஏரி போக சொல்லி குழப்பியதே

காலம் கடந்தாலும்
மழை நீரை போலே நேரம்
கண் முன் மெல்ல சிந்துது என் சிந்தனையிலே
கடிகாரம் வாங்க போனால்
அந்த நேரம் வங்கி தந்தாய்
என்ன நானும் செய்வேனோ எந்தன் உயிரே

இன்று நேற்று நாளை
என்றும் நீ என் தேவதை
காதல் செய்யும் மாயை
என் வானம் எங்கும் பூ மழை



Credits
Writer(s): Hiphop Tamizha, Vivek
Lyrics powered by www.musixmatch.com

Link