Mudhal Naal

முதல் நாள் இன்று
எதுவோ ஒன்று
வேராக உனை மாற்றலாம்
அங்கங்கு அனல் ஏற்றலாம்

என் உள்ளம் பாடுகின்றது
யார் சொல்லி கற்றுக் கொண்டது
நில் என்றால் சட்டென்று
நிற்காதம்மா
நான் என்ன சொன்னாலும்
கேக்காதம்மா
ஓஹோ ஜானே ஜான்

முதல் நாள் இன்று
எதுவோ ஒன்று
வேராக உனை மாற்றலாம்
அங்கங்கு அனல் ஏற்றலாம்

இசை தாகம் கூறுகின்ற உண்மை
குளிர் போலே காதல் மிக மென்மை
தீண்டுகயில்
தித்திக்காதோ சொல் உள்ளம்

முழுதாக மூழ்கியதும் இல்லை
மூழ்காமல் மிதந்ததும் இல்லை
காதல் கடல்
விழுந்தவர் காணும் நிலை
ஓ ஹு வாஹோ... ஓஹு ஹோ
வெகு தூரம் வந்தேன்
காதல் கிருமிகள் நெருங்காமல்

முதல் நாள் இன்று
எதுவோ ஒன்று
லேசாக எனை மாற்றலாம்
அங்கங்கு அனல் ஏற்றலாம்

இளம் நெஞ்சில் காதல் விதை தூவு
இல்லையேல் நீ தன்னந்தனி தீவு
வாழ்க்கை ஒரு
சுமையாகதோ சொல்லு

உதட்டாலே காதல் எனும் சொல்லை
உரைத்தாலே கூட வரும் தொல்லை
வாழும் மட்டும்
விழிகளில் தூக்கம் கெடும்
ஆ ஹ ஹா... ஹ ஒஓ ஹோ வாஹோ...
சுகமேது வாழ்வில்
காதல் வலியை சுமக்காமல்

முதல் நாள் இன்று
எதுவோ ஒன்று
வேராக உனை மாற்றலாம்
அங்கங்கு அனல் ஏற்றலாம்

உப்புக்கல் வைரம் என்று தான்
காட்டிடும் காதல் ஒன்று தான்
உண்டாகும் இன்பங்கள் உச்சம் உச்சம்
என்றாலும் துன்பம் தான் மிச்சம் மிச்சம்
ஓஹோ தோரியே
ஓசனா சோனா
ஓசனா சோனா
ஓசனா சோனா
ஓசனா சோனா



Credits
Writer(s): Harris Jayaraj, B. Vijay
Lyrics powered by www.musixmatch.com

Link