Kadavaul Paadhi

கடவுள் பாதி
மிருகம் பாதி
கலந்து செய்த கலவை நான்
வெளியே மிருகம்
உள்ளே கடவுள்
விளங்க முடியா கவிதை நான்
மிருகம் கொன்று
மிருகம் கொன்று
கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்
ஆனால்
கடவுள் கொன்று உணவாய்த் தின்று
மிருகம் மட்டும் வளர்கிறதே
நந்தகுமாரா நந்தகுமாரா
நாளை மிருகம் கொள்வாயா
மிருகம் தின்ற எச்சம் கொண்டு
மீண்டும் கடவுள் செய்வாயா
குரங்கிலிருந்து மனிதன் என்றால்
மனிதன் இரையாய் ஜனிப்பானா
மிருக ஜாதியில் பிறந்த மனிதா
தேவ ஜோதியில் கலப்பாயா
நந்தகுமாரா
கடவுள் பாதி
மிருகம் பாதி
கலந்து செய்த கலவை நான்
வெளியே மிருகம்
உள்ளே கடவுள்
விளங்க முடியா கவிதை நான்
மிருகம் கொன்று
மிருகம் கொன்று
கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்
கடவுள் கொன்று உணவாய்த் தின்று
மிருகம் மட்டும் வளர்கிறதே
கடவுள் பாதி
மிருகம் பாதி
கலந்து செய்த கலவை நான்
காற்றில் ஏறி
மழையில் ஆடி
கவிதை பாடும்
பறவை நான்
கடவுள் பாதி
மிருகம் பாதி
கலந்து செய்த கலவை நான்
காற்றில் ஏறி
மழையில் ஆடி
கவிதை பாடும்
பறவை நான்
ஒவ்வொரு துளியும்
ஒவ்வொரு துளியும்
உயிரின் வேர்கள் குளிர்கிறதே
எல்லாத் துளியும் குளிரும்போது
இரு துளி மட்டும் சுடுகிறதே
நந்தகுமாரா நந்தகுமாரா
மழைநீர் சுடாது தெரியாதா
கன்னம் வழிகிற கண்ணீர்த் துளிதான்
வெந்நீர்த் துளியென அறிவாயா
சுட்ட மழையும்
சுடாத மழையும்
ஒன்றாய்க் கண்டவன் நீதானே
கண்ணீர் மழையில்
தண்ணீர் மழையை
குளிக்க வைத்தவன் நீ தானே



Credits
Writer(s): Ehsaan Noorani, Loy Mendonsa, Shankar Mahadevan
Lyrics powered by www.musixmatch.com

Link