Saagaavaram

சாகாவரம் போல் சோகம் உண்டோ
கேளாய் மன்னா(கேளாய் மன்னா)
தீராக் கதையை கேட்பார் உண்டோ
கேளாய் மன்னா(கேளாய் மன்னா)

கணியர் கணித்த
கணக்கு படி நாம்
காணும் உலகிது
வட்ட பந்தாம்... வட்ட பந்தாம்(வட்ட பந்தாம்)

வட்ட பந்தை வட்டமடிக்கும்
மற்ற பந்தும்
போகும் மாண்டே
போகும் மாண்டே(போகும் மாண்டே)

மாளா ஒளியாம் ஞாயிரும் கூட
மற்றோர் யுகத்தில் போகும் கரிந்தே...
கரிந்து கரிந்தே...

கரிந்து எரிந்தும்
வெடித்த பின்னும்
கொதிக்கும் குழம்பில்
உயிர்கள் முளைக்கும்

முளைத்தும் முறிந்தும்
துளிர்க்கும் வாழை தன்
மரணத்துள்ளே
விட்டது விதையே (கேளாய் மன்னா) (கேளாய் மன்னா)

விதைத்திடும்
மெய் போல் ஒரு உயிரை
உயிர்த்து விளங்கும்
என் கவிதை விளங்கும்
கவிதை விளங்கும்

விழுங்கி துலங்கிடும்
வம்சம் வாழ
வாழும் நாளில் கடமை செய்ய
செய்யுள் போல் ஒரு
காதல் வேண்டும்
காதல் வேண்டும்
செய்யுள் போல் ஒரு காதல் வேண்டும்

வேண்டியதெல்லாம் வாய்த்த ஒருவன்
சாவையும் வேண்டி செத்த கதைகள்
ஆயிரம் உண்டு
கேளாய் மன்னா
கேளாய் மன்னா



Credits
Writer(s): Kamal Haasan, Mohamaad Ghibran Ghanesh Balaji
Lyrics powered by www.musixmatch.com

Link