Ennanga Sir Unga Sattam

என்னங்க சார் உங்க சட்டம்?
என்னங்க சார் உங்க திட்டம்?
கேள்வி கேட்க ஆளில்லாம
போடுறீங்க கொட்டம்

நூறு கோடி மனிதரு
யாரு யாரோ தலைவரு
ஓட்டு வாங்கிப் போற நீங்க
ஊழலோட டீலரு

ஆண்ட பரம்பர கைநாட்டு
ஆட்டி படைக்குது கார்ப்பரேட்டு
நாட்ட விக்கிற மந்திரிமாருக்கு
நல்லா வைய்யி சல்யூட்டு

ரேஷன் அரிசி புழுவுல
வல்லரசு கனவுல
தேசம் போற போக்க பாத்தா
தேறாதுங்க முடிவுல

கருத்துசொல்ல முடியல
கருப்புப் பணமும் திரும்பல
ஆளுக்காளு நாட்டாமதான்
பார்லிமெண்ட்டு நடுவுல

சொகுசுகாரு தெருவுல
வெவசாயி தூக்குல
வட்டிமேல வட்டிபோட்டு
அடிக்கிறீங்க வயித்துல

கையில் ஃபோனு ஜொலிக்குதா?
டி.வியும் ஓசியில் கெடைக்குதா?
அவரசமா ஒண்ணுக்கும் ரெண்டுக்கும்
ஒதுங்க எடமும் இருக்குதா?

இயற்கை என்ன மறுக்குதா?
எதையும் உள்ள பதுக்குதா?
எல்லாத்தையும் சூறையாட
சர்க்கார் கூட்டிக் கொடுக்குதா?

நல்ல தண்ணி கெடைக்கல
நல்ல காத்து கெடைக்கல
அரசாங்க சரக்குலதான்
கொல்லுறீங்க சனங்கள...

படம்: ஜோக்கர்
இயக்கம்: "குக்கூ" ராஜூமுருகன்
பாடலாசிரியர்: கவிஞர் யுகபாரதி



Credits
Writer(s): Yugabharathi, Sean Roldan
Lyrics powered by www.musixmatch.com

Link