Muthu Mani Malai

முத்து மணி மாலை
ஒன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட
வெட்கத்துல சேலை
கொஞ்சம் விட்டு விட்டுப் போராட

உள்ளத்துல நீதானே
உத்தமி உன் பேர்தானே
ஒரு நந்தவனப் பூதானே
புது சந்தனமும் நீதானே

முத்து மணி மாலை
ஒன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட

கொலுசுதான் மெளனமாகுமா
மனசு தான் பேசுமா

மேகந்தான் நிலவை மூடுமா
மவுசு தான் குறையுமா

நேசப்பட்டு வந்த பாசக் கொடிக்கு
காசிப்பட்டு தந்த ராசாவே

வாக்கப்பட்டு வந்த வாசமலரே
வண்ணம் கலையாத ரோசாவே

தாழம்பூவுல வீசும் காத்துல
வாசம் தேடி மாமா வா

முத்து மணி மாலை
என்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட

வெட்கத்துல சேலை
கொஞ்சம் விட்டுவிட்டுப் போராட

காலிலே போட்ட மிஞ்சி தான்
காதுல பேசுதே

கழுத்துல போட்ட தாலி தான்
காவியம் பாடுதே

நெத்திச்சுட்டியாடும் உச்சந்தலையில்
பொட்டுவச்சதாரு நாந்தானே

அத்திமரப் பூவும் அச்சப்படுமா
மக்கத்துணையாரு நீ தானே

ஆசை பேச்சுல பாதி மூச்சுல
லேசா தேகம் சூடேற

முத்து மணி மாலை
என்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட
வெட்கத்துல சேலை
கொஞ்சம் விட்டுவிட்டுப் போராட

உள்ளத்துல நீ தானே
உத்தமரும் நீதானே
இது நந்தவனப் பூ தானே
புது சந்தனமும் நீதானே

ஒரு நந்தவனப் பூ தானே
புது சந்தனமும் நீதானே



Credits
Writer(s): Ilaiyaraaja, R. V. Udhavakumar
Lyrics powered by www.musixmatch.com

Link