Kanna Thoodhu Po Da

கண்ணா தூது போடா
எந்தையிடம் கண்ணா தூது போடா
கண்ணா தூது போடா
உண்மை சொல்லி வாடா

வானம் தொடவே... ஏ...
நானும் முயன்றேன்
நாலு கிளைகள நீட்டி வளர்ந்தேன்
வேரறுந்து போகவில்லையே

காதல் அணிந்தே... ஏ...
காலம் கரைந்தே... ஏ...
தூரம் கடந்தே போன பிறகும்
பாசம் அது தீராதென...

கண்ணா தூது போடா
எந்தையிடம் கண்ணா தூது போடா
கண்ணா தூது போடா
உண்மை சொல்லி வாடா...

கானம் பாடும்
ஒரு தத்தை நானும் என
என்னைக் கண்ட விழி
எந்தை கொஞ்சல் மொழி
பாதை மாறுதென
பாசம் தீர்தல் முறை தானா...

காதல் சூடும்
ஒரு வண்ணப் பூ இவளின்
மணத்தில் பிழையறிந்து
நிறத்தில் தவறறிந்து
மீண்டும் பூக்கச்சொல்லி
கேட்கும் எந்தை மனம்
நியாயம் காணு வேனா... ஆ...

பாசம் அது மாறவில்லை
பாடல் அது முடிந்திடவில்லை
கண்ணில் வேர்விடும் கண்ணீர்த் தாவரம்
நெஞ்சின் ஆழக் கல்லுடைத்துச் செல்ல

ஆறும் சினம் ஆறும் என்றே
எந்தை காதில் நீயும் சொல்ல
தூது போடா...

கண்ணா தூது போடா
எந்தையிடம் கண்ணா தூது போடா
கண்ணா தூது போடா... ஆ...
உண்மை சொல்லி வாடா... ஆஅ...



Credits
Writer(s): Kaber Vasuki, Vasantha Govind
Lyrics powered by www.musixmatch.com

Link