Kanmunne

கண்முன்னே எத்தனை நிலவு காலையிலே
கலர் கலராய் எத்தனை பூக்கள் சாலையிலே
ஹேய் உடம்பினில் உடம்பினில் மாற்றம்
என் தலை முதல் கால் வரை ஏக்கம்
பருவம் என்றால் எரிய வேண்டும் காதலிலே

வயதுக்கு வந்த பெண்ணே வாடி முன்னே
இலவசமாய் தருவேன் எந்தன் இதயம் தானே
வலி என்பது இனிதானே அது கூட சுகம் தானே
ஒருமுறை தான் உரசிப்போடி பார்வையிலே

அடி fifteen போனது sixteen வந்தது
தாவணி பார்த்தேன் மீசை வந்தது
தடவிப் பார்த்தேன் பருக்கள் இருந்தது உன்னாலே

இரக்கம் இல்லை உன் இதழ் தந்தால்
என் இதழினில் சிறை பிடிப்பேன்
உன் கரம் தந்தால்
என் கரம் கொண்டு காலம் பிடித்திருப்பேன்

அடி fifteen போனது sixteen வந்தது
தாவணி பார்த்தேன் மீசை வந்தது
தடவிப் பார்த்தேன் பருக்கள் இருந்தது உன்னாலே

ராத்திரியில் கனவுக்குக் காரணம் பெண் தான்
ரகசியமாய் பார்க்கத் தோன்றும் அவள் முகம் தானே
வேளைக்கொரு பெண் தான் பிறக்க வேண்டும்
வேண்டிய வயதில் அவள் இருந்திட வேண்டும்
அட ஒரு பெண் காதல் பழ பழசு
இங்கு பல பெண் காதல் புது புதுசு
தங்கம் கொஞ்சம் வேண்டாம்
எனக்குத் தங்கப் புதையல் வேண்டும்

வயதுக்கு வந்த பெண்ணே வாடி முன்னே
இலவசமாய் தருவேன் எந்தன் இதயம் தானே
வலி என்பது இனிதானே அது கூட சுகம் தானே
ஒருமுறை தான் உரசிப்போடி பார்வையிலே

பெண்ணே நீ காதல் செய்ய வேண்டும்
இளமையிலே கல்வியோடு காதலும் வேண்டும்
காற்றில்லா இடத்துக்கும் நான் போவேன்
கண்ணெதிரே பெண் இருந்தால் நான் கண் மூடி வாழ்வேன்
உன் தகப்பன் திமிரையும் ஏற்றுக் கொள்வேன்
உன் தாயின் திட்டியும் கேட்டுக் கொள்வேன்
உன் அண்ணன் அடியையும் வாங்கிக் கொள்வேன்
நீ எனது அருகில் நின்றாலே

வயதுக்கு வந்த பெண்ணே வாடி முன்னே
இலவசமாய் தருவேன் எந்தன் இதயம் தானே
வலி என்பது இனிதானே அது கூட சுகம் தானே
ஒருமுறை தான் உரசிப்போடி பார்வையிலே

அடி fifteen போனது sixteen வந்தது
தாவணி பார்த்தேன் மீசை வந்தது
தடவிப் பார்த்தேன் பருக்கள் இருந்தது உன்னாலே

அடி fifteen... sixteen... தாவணி... மீசை வந்தது
தடவிப் பார்த்தேன் பருக்கள் இருந்தது உன்னாலே



Credits
Writer(s): Yuvan Shankar Raja, Selva Ragavan
Lyrics powered by www.musixmatch.com

Link