Ekkachakkamaai

எக்கச்சக்கமாய் எனை கொன்றாயடி
காதில் சத்தமாய் காதல் சொன்னாயடி
பக்கம் பக்கமாய் எனை தள்ளாதடி
வெட்கப்பட்டு என் மனம் கிள்ளாதடி

உன் கண்ண குழியினில் விழுந்தேனே
நீ கைய்ய நீட்டினால் எழுந்தேனே
ஒரு மூங்கில் காடென எறிந்தேனே
அதை முத்தம் தந்து நீ அணைத்தாயே அணைத்தாயே

காதல் சூரியன் நீரில் குளிக்கும்
காதல் பூமியை ஊடே உறுத்தும்
கனவு தோட்டத்தில் காதல் பரப்போம் வா வா வா

எக்கச்சக்கமாய் எனை கொன்றாயடி
காதில் சத்தமாய் காதல் சொன்னாயடி

ஒரு காதல் காகமாய் கரைந்தேனே
உன் காதல் கூட்டினில் நுழைந்தேனே
வானம் பார்க்கலாம் வா
யாரை கேட்கலாம்
காதல் கொண்டேனோ
உனை கண்ணால் கண்டேனோ

எக்கச்சக்கமாய் எனை கொன்றாயடி
காதில் சத்தமாய் காதல் சொன்னாயடி
பக்கம் பக்கமாய் எனை தள்ளாதடி
வெட்கப்பட்டு என் மனம் கிள்ளாதடி

என் காதல் ஜாதகம் தொலைத்தேனே
புது வட்டம் போட்டு நீ கொடுத்தாயே
துச்ச பார்வை நீ தான்
வெள்ளை காகிதம் நீ
அதில் வண்ணம் தீட்ட வா
என் எண்ணம் ஏற்ற வா

காதல் சூரியன் நீரில் குளிக்கும்
காதல் பூமியை ஊடே உறுத்தும்
கனவு தோட்டத்தில் காதல் பாரப்போம் வா வா வா

எக்கச்சக்கமாய் எனை கொன்றாயடி
காதில் சத்தமாய் காதல் சொன்னாயடி
பக்கம் பக்கமாய் எனை தள்ளாதடி
வெட்கப்பட்டு என் மனம் கிள்ளாதடி



Credits
Writer(s): Kabilan, Natarajan Sankaran
Lyrics powered by www.musixmatch.com

Link