Meghame O Meghame

மேகமே, ஓ மேகமே
உன் மழையை கொஞ்சம், தூவாதே
மாலையில் அந்தி மாலையில்
உன்னை மறுபடி அழைப்போம் போகாதே

மேகமே, ஓ மேகமே
உன் மழையை கொஞ்சம், தூவாதே

மாலையில் அந்தி மாலையில்
உன்னை மறுபடி அழைப்போம் போகாதே

Buckingham கால்வாயில்
தண்ணீர்தான் நம் கோவில்
ஆனந்தம் விழுது கட்டி வாழ்வோம்

அட ஹோய்யா
தள்ளி போயா
வெயில் போகும் முன்னே
வேளைய செய்வோம் வாயா

மேகமே, ஓ மேகமே
உன் மழையை கொஞ்சம் தூவாதே
ஹே-ஹே-ஹே-ஹே
மாலையில் அந்தி மாலையில்
உன்னை மறுபடி அழைப்போம் போகாதே
ஹே-ஹே-ஹே

சூரியன் உதிக்கும் போது
சாயம் போட போவோம்
சட்டுனு மழைத்துளி வந்தா
நாங்க தாயம் ஆடதான் போவோம்

வாடா-வாடா-வாடா-வாடா
ஒரு தாயம் (ஆறு)
வாடா-வாடா-வாடா
ஓரே ஒரு தாயம் (ஈராறு)
வாடா-வாடா-வாடா
ஒரே ஒரு புள்ளி (ச)

அ-அ-அ, நொண்டி கழுத மேல
நூறு மூட்ட போல
வாழ்க்கை வருத்தும் போது
நாங்க வானம் தேடிதான் போவோம்

சலவக்காரன் வாழ்க்க கூட
சாமிய போல்தான்
உங்களோட பாவா மூட்ட சொமப்போம்

அழுக்கோட வந்தாலும்
நெஞ்சில் தான் அழுக்கில்ல
ஆகாயம் போல மனசும் வெள்ள

அட ஹோய்யா
தள்ளி போயா
வெயில் போகும் முன்னே
வேளைய செய்வோம் வாயா
ஆ-ஆ, வாயா

கையில காசு இல்ல
மனசுல வேசம் இல்ல
பொய்யில வாழ்க்க இல்ல
அதனால் கஷ்டம் நஷ்டம்தான் இல்ல

Hello sir தொர
உன் சட்ட கர
என் கிட்ட வர
உட்டேன் பார் அற

பள்ளிக்கூடம் பக்கம்
மழைக்கும் ஒதுங்குனதில்ல

அனுபவ பாடம் படிச்சோம்
அதனால் வாழ்வில் தோல்வி இல்லை

ஒரு மா கனி, மா கனி
(ஒரு மா கனி, மா கனி)
இரு மா கனி அரைக்க
(இரு மா கனி அரைக்க)
மும்மா கனி முன்தானி
(மும்மா கனி முன்தானி)
நா மா கனி கா
(நா மா கனி கா)

எம்10 போட்ட குண்ட போல
வருமா சில நேரம்
பதுங்கி பாஞ்சு
அடிக்கும் போதும் பயம் இல்ல

தலை சாஞ்சு போனாலும்
தன்மானம் சாயாது
மண்ணோட ஈரம் போல வாழ்வோம்

அட ஹோய்யா
தள்ளி போயா
வெயில் போகும் முன்னே
வேளைய செய்வோம் வாயா

மேகமே, ஓ மேகமே
உன் மழையில் கொஞ்சம் நனைவோமே
மாலையில் அந்தி மாலையில்
எங்க மனச உனக்கு தந்தோமே



Credits
Writer(s): Na. Muthukumar, G.v. Prakesh Kumar
Lyrics powered by www.musixmatch.com

Link