Chinna Chiru Vayathil - Version 1

சின்னஞ் சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

சின்னஞ் சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

மோகனப் புன்னகையில் ஓர் நாள் மூன்று தமிழ் படித்தேன்
சாகச நாடகத்தில் அவனோர் தத்துவம் சொல்லி வைத்தான்
உள்ளத்தில் வைத்திருந்தும் நானோர் ஊமையைப் போலிருந்தேன்
ஊமையைப் போலிருந்தேன்
... ம்... ம் ...
ஆ ... ஆ ...
கள்ளத்தனம் என்னடி எனக்கோர் காவியம் சொல்லு என்றான்
சின்னஞ் சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

வெள்ளிப் பனியுருகி மடியில் வீழ்ந்தது போலிருந்தேன்
வெள்ளிப் பனியுருகி மடியில் வீழ்ந்தது போலிருந்தேன்
பள்ளித்தலம் வரையில் செல்லம்மா பாடம் பயின்று வந்தேன்
காதல் நெருப்பினிலே எனது கண்களை விட்டுவிட்டேன்
மோதும் விரகத்திலே ... மோதும் விரகத்திலே செல்லம்மா ம்ம்ம்...

சின்னஞ் சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

Credits
Writer(s): Ilaiyaraaja, Vaalee, Kannadhasan, Raaja Ilaiya
Lyrics powered by www.musixmatch.com

Link