Adadaa Adadaa Ennai

அடடா அடடா
என்ன என்ன இம்சை செய்வானோ?
அவன் தான் அவன் தான்
சின்னச் சின்ன சிலுமிசம் செய்வானோ?

ஆடை என்பது அழகின் கவசம்
அவன் தான் அறிவானோ?
காதல் என்பது உணர்வின் கவசம்
அவன் தான் அறிவானோ?

நிழலாய், தொடர்ந்து
அவன் நிஜமாய் ஆனானே
காற்றாய், தொடர்ந்து
அவன் காணா போனானே

அடடா அடடா
என்ன என்ன இம்சை செய்வானோ?
அவன் தான் அவன் தான்
சின்னச் சின்ன சிலுமிசம் செய்வானோ?

விரல்கள் தீண்டுமோ?
விழிகள் தீண்டுமோ?
இதழ்கள் தீண்டுமோ?, நான் அறியேன்
உடலைச் சுமக்குமோ?
உயிரைச் சுமக்குமோ?
உணர்வை சுமக்குமோ?, நான் அறியேன்

ரேகை பதிந்து கிடக்குமோ?
வேர்வை சுமந்து கிடக்குமோ?
போர்வைக்குள்ளே தவிக்குமோ?
ஐயோ, அதைத்தான் அறியேன் நான்

இல்லை, இதற்கு எல்லை
இன்னும் இருக்குத் தொல்லை
உன்னைத் தந்தால் தீரும் தீருமே

அடடா அடடா
என்ன என்ன இம்சை செய்வானோ?
அவன் தான் அவன் தான்
சின்னச் சின்ன சிலுமிசம் செய்வானோ?

தவறாய் கனவுகள், தவறாய் நினைவுகள்
தவறாய் தவறுகள், நிகழ்ந்திடுமோ?
இரவும் அசைவமாய்
பகலும் அசைவமாய்
உறவும் அசைவமாய் மாறிடுமோ?

வீணாய் குழப்பம் நடக்குதோ?
தானாய் உறக்கம் தொலையுதோ?
யாரோ என்னைக் கொல்கிறான்
தீதா?, நன்றா? தெரியவில்லை

அன்பே
உனக்கும் எனக்கும் இடையில்
எதுவும் நடக்கும்
சொல்ல எனக்கு வார்த்தை இல்லையே

ஒருநாள் ஒருநாள்
உன்தன் விழியில் சிக்கிக் கொண்டேனே
மறுநாள் மறுநாள்
உன்தன் வழியில் மரமாய் நின்றேனே

பொம்மை கிடைத்த குழ்நதையைப் போலே
பூரித்துப் போனேனே
புதையல் கிடைத்த ஏழையைப் போலே
பேரின்பம் கொண்டேனே

இறைவன் கொடுத்தான்
உனை எனக்கே எனக்கே தான்
நானும் இனிமேல்
அட உனக்கே உனக்கே தான்

ஒருநாள் ஒருநாள்
உன்தன் விழியில் சிக்கிக் கொண்டேனே
மறுநாள் மறுநாள்
உன்தன் வழியில் மரமாய் நின்றேனே



Credits
Writer(s): Snehan, Yuvanshankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link