Naan Mudhan Mudhal

நான் முதன் முதல் பாடிய பாட்டு
இங்கு ஏழையின் அழுகுரல் கேட்டு
இரவில் வந்ததால் இருண்டு போனதா இருண்ட வாழ்வும் இனி மாறும்...
நான் முதன் முதல் பாடிய பாட்டு
இங்கு ஏழையின் அழுகுரல் கேட்டு
இரவில் வந்ததால் இருண்டு போனதா இருண்ட வாழ்வும் இனி மாறும்...

போராடும் நெஞ்சங்கள் சோர்வாகக் கூடாதம்மா
போராடிப் பாராமல் துன்பங்கள் தீராதம்மா
கேள்விகள் விடை பெற வேண்டும்
அந்த விடைகளில் புது யுகம் தோன்றும்

கேட்க மறந்த மனிதா உன் ஊமை வாழ்வும் இனிதா
அழுபவன் சிரித்திட வேண்டும்
அந்த சிரிப்பினில் சமத்துவம் தோன்றும்

சிரிக்க மறந்த மனிதா நீ சுமக்கும் பாரம் பெரிதா
தாங்காது இனி தாங்காது புது போராட்டம் காண வா ...
நீ முதன் முதல் பாடிய பாட்டு இங்கு ஏழையின் அழுகுரல் கேட்டு
இரவில் வந்ததால் இருண்டு போனதா இருண்ட வாழ்வும் இனி மாறும்...

கனவுகள் உயிர் பெற வேண்டும்
அது உயிர் பெற போரிட வேண்டும்
காலம் மீண்டும் வருமா அது கனவை மீட்டுத் தருமா

சிறைகளும் உடை படவேண்டும்
அதை உடைத்திடத் துணிவுகள் வேண்டும்
துணையும் மீண்டும் வருமா அது துணிவை மீட்டுத் தருமா
போதாது இது போதாது நீ போராட ஓடி வா.
நான் முதன் முதல் பாடிய பாட்டு
இங்கு ஏழையின் அழுகுரல் கேட்டு
இரவில் வந்ததால் இருண்டு போனதா இருண்ட வாழ்வும் இனி மாறும்...
நான் முதன் முதல் பாடிய பாட்டு
இங்கு ஏழையின் அழுகுரல் கேட்டு
இரவில் வந்ததால் இருண்டு போனதா இருண்ட வாழ்வும் இனி மாறும்...
அன்பு கிருஷ்ணா

Credits
Writer(s): Manoj Koli Mohata, Gyan Verma
Lyrics powered by www.musixmatch.com

Link